

பெர்த்,
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட் டுள்ளன. 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது முதலாவது ஆட் டத்தில் வியட்நாம் அணியுடன் நேற்று பெர்த் நகரில் மோதியது.
விறுவிறுப் பான இந்த ஆட்டத்தில் வியட்நாம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 7-ந்தேதி ஜப்பானை சந்திக்கிறது.