

டோக்கியோ,
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் விவரம் வருமாறு:-
வில்வித்தை: ரிகர்வ் ஆண்கள் தனிநபர் தொடக்க சுற்று, நீரஜ் சவுகான், தீரஜ் பொம்மதேவரா, அதிகாலை 5.30 மணி, ரிகர்வ் பெண்கள் தனிநபர் தொடக்க சுற்று, கும்கும், கீர்த்தி, காலை 9.45 மணி.
டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று தஷினேஸ்வர், காலை 10 மணி, சுமித் நாகல், பிற்பகல் 12.30 மணி.
துப்பாக்கி சுடுதல்: டிராப் பெண்கள் தனிநபர் தகுதி சுற்று, அணிகள் இறுதிப்போட்டி, அவார் ரிஸ்வி, கைனென் செனாய், ஷபத் பரத்வாஜ், காலை 6.30 மணி முதல், டிராப் பெண்கள் தனிநபர் தகுதி சுற்று, அணிகள் இறுதிப்போட்டி, நீரு, மனிஷா கீர். ஆஷிமா ஆசியாவத், காலை 6.30 மணி முதல்.
ஸ்குவாஷ்: பெண்கள் லீக் சுற்றில் இந்தியா-ஈரான், காலை 6.30 மணி.
குத்துச்சண்டை: பெண்களுக்கான 65 கிலோ அரையிறுதியில் பர்வீன் (இந்தியா) - லி ஷூ (சீனா), காலை 10.15 மணி, ஆண்களுக்கான 80 கிலோ அரையிறுதியில் அங்குஷ் (இந்தியா) - பஸ்லித்தின் எர்கின்போவ் (உஸ்பெகிஸ்தான்), காலை 11 மணி, ஆண்களுக்கான 90 கிலோவுக்கு மேலான அரையிறுதியில் நரேந்தர் (இந்தியா) - ஐபெக் ஓரல்பே (கஜகஸ் தான்), காலை 11.30 மணி.
கைப்பந்து: ஆண்கள் லீக் சுற்றில் இந்தியா-கத்தார், பிற்பகல் 12.30 மணி.
தடகளம்: ஆண்களுக்கான போல்வால்ட் இறுதிப்போட்டி, தேவ்குமார் மீனா, குல்தீப் குமார், பிற்பகல் 2.50 மணி, பெண்களுக்கான உயரம் தாண்டுதல், பூஜா, சுப்ரியா பசவராஜூ, மாலை 3.35 மணி, பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல், அனுஷ்கா யாதவ், தன்யா சவுத்ரி, மாலை 4.05 மணி, ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டம், முகமது அப்சல், மாலை 4.35 மணி, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டம், கவுதமி, பூஜா, மாலை 4.20 மணி, ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம், குல்வீர் சிங், அவினாஷ் சாப்ளே, மாலை 4.45 மணி, பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம், மாலை 5.35 மணி.