ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி

கோப்புப்படம்
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது.
சோலோ,
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 17 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதன் 'டி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஹாங்காங்கை சந்தித்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 110-100 என்ற புள்ளி கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. ஹாங்காங் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடம் பெற்று கால்லிதியை எட்டியது. அடுத்து இந்திய அணி காலிறுதியில் 'ஏ' பிரிவில் 2-வது இடம் பிடித்த ஜப்பானுடன் மோதுகிறது.
Related Tags :
Next Story






