ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி... இந்திய அணி தங்கம் வென்றது

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஷிம்கென்ட்,

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவு பந்தயத்தில் அர்ஜூன் பபுதா, ருத்ரான்ஷ் பட்டீல், கிரண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (1892.5 புள்ளி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

சீனா (1889.2 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா (1885.7 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றின. ஜூனியர் மகளிருக்கான ஸ்கீட் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் மான்சி ரகுவன்ஷி 53 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தையும், யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கினார்கள்.

இதன் ஆண்கள் பிரிவில் கஜகஸ்தான் வீரர் அர்டோம் செட்லின்கோவ் (53 புள்ளி) தங்கப்பதக்கமும், இந்திய வீரர்கள் ஹர்மிஹர் சிங் (52 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஜோதிர் ஆதித்யா சிங் சிசோடியா (43 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com