ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்ற மனு பாக்கர்


ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்ற மனு பாக்கர்
x
தினத்தந்தி 19 Aug 2025 5:05 PM IST (Updated: 19 Aug 2025 5:06 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்

ஷிம்கென்ட்,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 219.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் பெற்ற 10வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 More update

Next Story