

சென்னை,
19வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த கால்இறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 113, 116, 116 என்ற நேர் செட்டில் 27 நிமிடங்களில் லியூ டஸ் லிங்கை (ஹாங்காங்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். சென்னையைச் சேர்ந்த தீபிகா அடுத்து ஹாங்காங் வீராங்கனை அனி அவ்ஐ எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா (இந்தியா) 117, 113, 911, 1210 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிசாகியை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் பிரிவில் இந்திய முன்னணி வீரர் சவுரவ் கோஷல் 117, 117, 117 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் விக்ரம் மல்ஹோத்ராவை தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்தார். அதே சமயம் இன்னொரு இந்திய வீரர் ஹரிந்தர் பால்சிங் சந்து 811, 911, 811 என்ற நேர் செட்டில் மேக்ஸ் லீயிடம் (ஹாங்காங்) வீழ்ந்தார்.