ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அஜித்துக்கு வெண்கலம்

ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அஜித் வெண்கலப்பதக்கம் வென்றார்.
Image Courtesy: SAI Media twitter
Image Courtesy: SAI Media twitter
Published on

காந்திநகர்,

ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்து வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி சுற்றாக விளங்கும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அஜித் நாராயணா 'ஸ்னாட்ச்' முறையில் 140 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 174 கிலோவும் என மொத்தம் 314 கிலோ எடை தூக்கினார். அவர் 'கிளீன் அண்ட் ஜெர்க்' மற்றும் ஒட்டு மொத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

வடகொரியாவின் வோன்ஜூரி, 'ஸ்னாட்ச்' முறையில் 154 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 197 கிலோவும் என மொத்தம் 351 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கமும், சீனாவின் ஜியான் சென் 'ஸ்னாட்ச்' முறையில் 155 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 180 கிலோவும் என மொத்தம் 335 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும் தட்டிச் சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com