ஆசிய பளுதூக்குதல்: வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 179 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய பளுதூக்குதல்: வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை
Published on

காந்திநகர்,

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் காந்தி நக ரில் நேற்று தொடங்கியது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 179 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் நடந்த பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கோமல் கோஹர் மொத்தம் 177 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-78, கிளீன் அண்ட் ஜெர்க் 99) வெண்கலப்பதக்கம் பெற்றார். சீன தைபேயின் ஷூயாங் யி சென் (193 கிலோ) தங்கப்பதக்கமும், பாங் வான் லிங் (192 கிலோ) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com