ஈகுவடார் நாட்டு தடகள வீரர் படுகொலை

ஈகுவடார் நாட்டின் இளம் தடகள வீரர் படுகொலை செய்யப்பட்டு தெருவில் கிடந்துள்ளார்.
ஈகுவடார் நாட்டு தடகள வீரர் படுகொலை
Published on

எஸ்மெரால்டஸ்,

ஈகுவடார் நாட்டை சேர்ந்த தடகள வீரர் அலெக்ஸ் குயினோன்ஸ் (வயது 32). உலக தடகள போட்டியின் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றவர். இந்த நிலையில், அவர் குவாயாகில் பகுதியில் உள்ள தெருவில் இறந்து கிடந்துள்ளார் என அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அவரது மறைவை தொடர்ந்து, பார்சிலோனா கால்பந்து கிளப் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது. அவர்களுடைய தடகள குழுவின் உறுப்பினர்களில் குயினோஸ்சும் ஒருவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com