ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் பிரனாய் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com