

பீஜிங்,
சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற குழு ஸ்கை ஜம்பிங் போட்டியில் ஆஸ்திரியா தங்கம் வென்றது.2018ம் ஆண்டு நடைபெற்ற பியோங்சாங் விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்ல தவறிய ஆஸ்திரியா, இந்த முறை தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
அந்நாட்டின் ஃபெட்னர் 128 மீட்டர்(420 அடி) குதித்தார். இதன்மூலம் அவர் ஸ்லோவேனியாவை முந்தி முதலிடம் பிடித்தார். மேலும், நான்கு பேர் கொண்ட குழு ஸ்கை ஜம்பிங் போட்டியில் ஆஸ்திரியாவின் ஃபெட்னர், ஸ்டீபன் கிராஃப்ட், டேனியல் ஹூபர் மற்றும் ஜான் ஹோர்ல் இணைந்து 942.7 புள்ளிகளைப் பெற்றனர்.இதன் மூலம், ஸ்லோவேனிய அணியை 8.3 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.
அவர்கள் காண்போரை வியக்கச் செய்யும் விததில் சாகசங்களை மேற்கொண்டு குதித்து நடுவர்களை வெகுவாக கவர்ந்து முதலிடம் பெற்றனர்.
குழு ஸ்கை ஜம்பிங் போட்டியில் ஆஸ்திரிய வீரர்களை தொடர்ந்து ஸ்லோவேனியா வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஜெர்மனி வெண்கலம் வென்றது.