

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் இன்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. போட்டி தொடங்கும் முன்பாக ஐபிஎல் 2022 தொடருக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் ,வீராங்கனைகள், பிசிசிஐ சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. வெண்கல பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைனுக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கபடது. அதேபோல் ஆடவர் ஹாக்கி அணிக்கும் ரூ. 1 கோடிக்கான காசோலை வழங்கி கவுரவிக்கப்பட்டது.