

சென்னை,
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 7-6 (7-5), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.