

வாஷிங்டன்,
டிட்ராயிட் டைகர்ஸ் மற்றும் பால்டிமோர் ஓரியோல்ஸ் அணிகளுக்கு இடையேயான பேஸ்பால் போட்டியின் போது, கருப்பு நிற அணில் ஒன்று திடீரென மைதானத்திற்குள் புகுந்ததால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
அணிலை பிடிக்க மைதான பராமரிப்புக் குழுவை சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முயற்சித்தனர். ஆனால், அணில் அங்கும் இங்குமாக ஓடியதால், அதை பிடிக்க அவர்கள் நீண்ட நேரம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அணில் அங்குமிங்கும் ஓட, அதன் பின்னால் ஊழியர்கள் துரத்தி சென்ற காட்சியை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.
இறுதியில், ஊழியர் ஒருவர் அணிலின் மீது துண்டு (Towel) ஒன்றை போட்டு, அதை பாதுகாப்பாகப் பிடித்து மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றார். இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.
இந்த போட்டியில் டிட்ராயிட் டைகர்ஸ் அணி 5-8 என்ற கணக்கில் பால்டிமோர் ஓரியோல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.