

உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கவுரவ் பிதூரி மற்றும் ஆசிய விளையாட்டு குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற அமித் பங்கால் ஆகியோரது பெயர்களை அர்ஜுனா விருதுக்கு இந்திய குத்து சண்டை கூட்டமைப்பு பரிந்துரைத்து உள்ளது.
இதேபோன்று மகளிருக்கான உதவி பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் முன்னாள் மகளிர் தலைமை பயிற்சியாளர் சிவ் சிங் ஆகியோரின் பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைத்து உள்ளது.