ஆசிய போட்டியில் வெண்கலம்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய போட்டியில் வெண்கலம்: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on: 

சென்னை,

இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் (Squash) விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com