

பெஜியா,
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பிய னுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று 13-வது சுற்று நடந்தது.
ஆண்கள் பிரிவில் அனிஷ் கிரிக்கு (நெதர்லாந்து) எதிரான ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ் தான்) 58-வது நகர்த்தலில் டிரா செய்தார். இன் னும் ஒரு சுற்று எஞ்சியுள்ள நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் (9.5 புள்ளி) ஜவோகிர் சிந்தாரோவ் பட் டத்தை உறுதி செய்தார். 2-வது இடத்தில் அனிஷ் கிரி (7.5 புள்ளி) உள் ளார். கடைசி ஆட்டத்தில் சிந்தாரோவ் தோற்றாலும் பிரச்சினை இல்லை. இதன் மூலம் ஆண்டின் இறுதியில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பில் நடப்பு சாம்பியனான தமிழகத்தின் குகேசுடன், சிந்தாரோவ் மோதுவார்.