

பெஜியா,
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பிய னுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 9-வது சுற்று நடந்தது. பெண்கள் பிரிவில் வெள்ளை நிற காய் களுடன் ஆடிய தமிழகத்தின் ஆர்.வைஷாலி 31-வது நகர்த்தலில் சக நாட்டவரான திவ்யா தேஷ் முக்கை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றார்.
9-வது சுற்று முடிவில் வைஷாலி, சீனாவின் ஜூ ஜினெர் ஆகியோர் தலா 5.5 புள்ளியுடன் முன்ன ணியில் உள்ளனர். இன்று 10-வது சுற்று நடக் கிறது.