கேண்டிடேட்ஸ் செஸ்: வைஷாலி வெற்றி

14 சுற்று களை கொண்ட இந்த போட்டியில் நேற்று 11-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
கேண்டிடேட்ஸ் செஸ்: வைஷாலி வெற்றி
Published on

பெஜியா,

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பிய னுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற்று களை கொண்ட இந்த போட்டியில் நேற்று 11-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இதில் பெண் கள் பிரிவில் ஒரு ஆட்டத்தில் தமிழக வீராங் கனை ஆர்.வைஷாலி, ரஷியாவின் அலெக் சாண்ட்ரா கோரியச்சினாவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய வைஷாலி 45-வது நகர்த்தலில் அலெக்சாண்ரா கோரியச்சி னாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றார். 11-வது சுற்று முடிவில் வைஷாலி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com