ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரருக்கு ரொக்கப்பரிசு

உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அபய் சிங்குக்கு பாராட்டு விழா நடந்தது.
சென்னை,
சென்னையில் நடந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. அந்த அணியில் அங்கம் வகித்த அபய் சிங் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் படித்து வருகிறார்.
உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அபய் சிங்குக்கு பாராட்டு விழா குருநானக் கல்லூரியில் நடந்தது. இதில் அபய் சிங்குக்கு ரூ.11 லட்சம் ரொக்கப்பரிசை கல்லூரி தாளாளர் மஞ்சித் சிங் நய்யார் வழங்கினார். அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டது. விழாவில் துணைத் தலைவர் ஜஸ்பீர்சிங் நருலா, முதல்வர் எழிலரசி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம், அபய் சிங்கின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






