50-வது பிறந்த நாளை கொண்டாடினார், ஆனந்த்

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
50-வது பிறந்த நாளை கொண்டாடினார், ஆனந்த்
Published on

சென்னை,

இந்திய செஸ் ஜாம்பவான் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தனது 50-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்புக்குரிய விஸ்வநாதன் ஆனந்த், 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். தரவரிசையில் நீண்ட காலம் நம்பர் ஒன் இடத்தையும் அலங்கரித்துள்ளார். இந்திய விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் கேல்ரத்னா விருதை பெற்ற முதல் வீரரும் இவர் தான்.

இந்தியாவில் செஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு அவரது அபரிமிதமான பங்களிப்பும் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. வயதில் அரைசெஞ்சுரி அடித்தாலும் இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் தனது சதுரங்க வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com