

லண்டன்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான 71-வது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரையிறுதியின் 2-வது ஆட்டத்தில் ஆர்ச னல் (இங்கிலாந்து)-அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் பலப்ப ரீட்சை நடத்தின.
பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஆர்சனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. 45-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை சாகா அடித்தார். முதலாவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்து இருந்த நிலையில் இரு ஆட்டம் முடிவில் ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அட்லெட் டிகோ மாட்ரிட்டை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.