

பாரீஸ்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதன் அரையிறுதி 2 ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் பாரீசில் நடந்த அரையிறுதியின் முதலாவது ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.. பிரான்ஸ்) அணி, பேயர்ன் முனிச்சை (ஜெர்மனி) எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. அணி 5-4 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச்சை வீழ்த்தியது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் முனிச்சில் வரு கிற 6-ந் தேதி நடக்கிறது. இதில் பி.எஸ்.ஜி. டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும்.