

மாட்ரிட்,
ஐரோப்பிய முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் 'நாக்-அவுட்' பிளே-ஆப் சுற்றில் ஒவ் வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோதும். இதன் முடிவில் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் மாட்ரிட்டில் நடந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- பென்பிகா (போர்ச்சுகல்) அணிகள் மீண்டும் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத் தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்த ரியல் மாட்ரிட் ஒட்டு மொத்தத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந் தைய சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறியது.