

சென்னை,
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் 4 ஆட்டங்களும் டிராவாகின.
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 8 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 7 சுற்றுகளை கொண்டது. இதில் நேற்று நடந்த 4-வது சுற்றில் 4 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது.
உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், 41-வது காய் நகர்த்தலில் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் (உஸ்பெகிஸ்தான்) டிரா செய்ததும் அடங்கும்.
4-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 3 புள்ளியுடன் முதலிடத்திலும், இந்தியாவின் அர் ஜூன் எரிகைசி 2½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இன்று 5-வது சுற்று நடக்கிறது.