சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி - இன்று தொடக்கம்

14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி - இன்று தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சக்தி குரூப் நிறுவனம் ஆதரவுடன் டாக்டர் ஆர்.என்.மகாலிங்கம் கோப்பைக்கான 14-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 7-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள அம்பாஸ்டர் பல்லவா ஓட்டலில் நடக்கிறது.

இதில் இந்தியா, ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, பெலாரஸ் உள்பட 28 நாடுகளில் இருந்து 320 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் சர்வதேச மாஸ்டரான ஆரோன்யக் கோஷ் போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றுள்ளார். நடப்பு சாம்பியன் ரஷியாவின் சவ்செங்கோ போரிஸ் அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் விஷ்ணு பிரசன்னா, தீபன் சக்ரவர்த்தி, ஆர்.லட்சுமண் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.20 லட்சமாகும். சாம்பியன் பட்டத்தை வெல்பவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.3 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com