ஜாம்பவான்கள் செஸ்: விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்திய காஸ்பரோவ்

இருவரும் ரேபிட் முறையில் 6 ஆட்டங்களிலும், பிளிட்ஸ் முறையில் 6 ஆட்டங்களிலும் மோத வேண்டும்.
செயின்ட் லூயிஸ்,
முன்னாள் உலக செஸ் சாம்பியன்களான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இவர்கள் இருவரும் ரேபிட் முறையில் 6 ஆட்டங்களிலும், பிளிட்ஸ் முறையில் 6 ஆட்டங்களிலும் மோத வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவில் தலா இரு ஆட்டம் நடைபெறும். தொடக்க நாளில் நடந்த முதல் இரு ரேபிட் ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த பிளிட்ஸ் பிரிவில் முதலாவது ஆட்டத்தில் காஸ்பரோவ் 50-வது நகர்த்தலில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார். இதன் 2-வது ஆட்டம் 45-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. முதல் நாள் ஆட்டங்கள் முடிவில் காஸ்பரோவ் 2½- 1½ என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.
Related Tags :
Next Story






