சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய ஜோடி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிஆதிக்கம் செலுத்தியது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

ஷென்ஜென்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் ரெட்டி - சிக்கி ரெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரெஸ்லி-ஜென்னி ஜோடியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிஆதிக்கம் செலுத்தியது. இதனால் 23-21, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சுமித் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com