சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்


சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்
x

image courtesy:PTI

சிந்து காலிறுதியில் தென்கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொள்கிறார்.

ஷென்சென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15 மற்றும் 21-15 என்ற நேர்செட்டில் சோச்சுவோங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தென்கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொள்கிறார்.

1 More update

Next Story