சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி


சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி
x

கோப்புப்படம் 

2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சக நாட்டவரான உன்னதி ஹூடாவுடன் மோதினார்.

சாங்சோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சக நாட்டவரான வளர்ந்து வரும் 'இளம் புயல்' உன்னதி ஹூடாவை சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 35-வது இடம் வகிக்கும் உன்னதி ஹூடா 21-16, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் தரநிலையில் 15-வது இடத்தில் உள்ள 30 வயதான சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கடைசி செட்டில் ஹூடாவின் வேகத்துக்கும், ஷாட்டுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சிந்து அடங்கிப் போனார். இந்த ஆட்டம் 1 மணி 13 நிமிடம் நீடித்தது.

2-வது முறையாக சிந்துவுடன் மோதிய உன்னதி ஹூடா அவருக்கு எதிராக ருசித்த முதல் வெற்றி இதுவாகும். அத்துடன் அவர் வாழ்க்கையில் பெரிய வெற்றியாகவும் இது அமைந்தது. அரியானாவை சேர்ந்த 17 வயதான உன்னதி ஹூடா காலிறுதியில் 2 முறை உலக சாம்பியனான அகானே யமாக்குச்சியை (ஜப்பான்) எதிர்கொள்கிறார்.

1 More update

Next Story