சீன ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சாங்சோ,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது .இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவில் சாத்விக் - சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா - கென்யா மிட்சுஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட சாத்விக் - சிராக் ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஹிரோகி ஒகாமுரா - கென்யா மிட்சுஹாஷி ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com