சீன ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சாங்சோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியாவின் ஓங் யூ சின் - தியோ ஈ யி ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய சாத்விக் - சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஓங் யூ சின் - தியோ ஈ யி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com