சீன தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா அரையிறுதிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கேடேதோங் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தைபேய் சிட்டி,

சீன தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தைபேய் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 12-21, 10-21 என்ற நேர்செட்டில் யுடை ஒகிமோட்டாவிடம் (ஜப்பான்) தோல்வி அடைந்து வெளியேறினார்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கேடேதோங் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா, 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சுபனிதா கேடேதோங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com