காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

அவர் 130.9 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்ப தக்கத்தை தட்டிச் சென்றார்.

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் பதக்கம்
Published on

கிளாஸ்கோ,

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரு கிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 123 பேர் கொண்ட படை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முதலாவது பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான பாரா வலுதூக்குதலில்(பவர் லிப்டிங்) ஹெவிவெயிட் பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் ஜாண்டு குமார் தனது முதல் இரு முயற்சியில் 181 கிலோ மற் றும் 190 கிலோ எடை தூக்கினார்.

196 கிலோஎடையை தூக்க எடுக்க முயற்சி தோல்வியில் முடிந்தது. என்றாலும் 190 கிலோ எடையே அவர் பதக்கமேடையில் ஏறுவதற்கு போதுமானதாக இருந்தது. அவர் 130.9 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்ப தக்கத்தை தட்டிச் சென்றார். நைஜீரியாவின் ரிலுவான் இட்ரிஸ் 208 கிலோ எடை தூக்கி 132.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், இங்கிலாந்தின் மேத்யூ ஹார்டிங் 131 புள்ளிகளுடன் (199 கிலோ) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com