காமன்வெல்த் விளையாட்டு - பாரா 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் திலிப் காவித், முகமது பசில் ஆகியோர் டாப்-2 இடங்களை பிடித்து அசத்தினர்.
காமன்வெல்த்
Published on

கிளாஸ்கோ,

காமன்வெல்த் விளையாட்டில் பாரா 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் திலிப் காவித் தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த்

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

டாப்-2

இதில் நடைபெற்ற பாராதடகளத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் (டி47 பிரிவு) இந்திய வீரர்கள் திலிப் காவித், முகமது பசில் ஆகியோர் டாப்-2 இடங்களை பிடித்து அசத்தினர். 10.71 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக் கத்தை முத்தமிட்டார் திலிப் காவித். 10.83 வினாடிகளில் 2-வதாக வந்து முகமது பசில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com