

புதுடெல்லி,
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை நடக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, வெண்கலப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் ஆகியோர் இந்த போட்டி யின் தொடக்கவிழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடி மற்றும் தீபத்தை ஏந்தி செல்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.