

புதுடெல்லி,
காமன்வெல்த் இளையோர், ஜூனியர் மற்றும் சீனியர் பளுதூக்குதல் சாம்பி யன்ஷிப் போட்டி சமோவா நாட்டின் அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுனில் சிங் 'ஸ்னாட்ச்' முறையில் 126 கிலோ, 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 145 கிலோ என மொத்தம் 271 கிலோ எடைதூக்கி தங் கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அபினோப் கோகோய் மொத்தம் 284 கிலோ (ஸ்னாட்ச்-129, கிளீன் அண்ட் ஜெர்க்-155) எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அய்சங்பா கோகோய் மொத்தம் 185 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-79, கிளீன் அண்ட் ஜெர்க்-106) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
சீனியர் பிரிவில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சாரு பேசி 289 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-127, கிளீன் அண்ட் ஜெர்க்-162) தங்கப்பதக்கம் வென்றார்.