இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி

கொரோனா பாதித்த இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி
Published on

புதுடெல்லி,

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த கொரோனா பாதிப்புகள் நேற்று சற்றே குறைந்தன. இந்நிலையில், ஒரே நாளில் 3.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை தெரிவித்தது.

இதனால், 1.99 கோடி பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. 3,417 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ.சி.யூ. பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதனை இந்திய வில்வித்தை கூட்டமைப்பு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com