கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி

கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்களை சந்தித்துள்ளவர்களுக்கு, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்தித்து இருக்கும் தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கத்தை சார்ந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என்று அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார். மாநில அளவிலான கூடைப்பந்து அணியில் (அனைத்து வயது பிரிவிலும்) இடம் பெற்றுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களின் இந்த ஆண்டுக்கான படிப்பு கட்டணம் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ஆகும் செலவு முழுமையாக ஏற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டும் கூடைப்பந்து வீரர்கள், நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சமூக விலகலை கடைப்பிடித்து ஸ்டேடியங்களில் பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com