குரோஷியா செஸ்: 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா 23-வது நகர்த்தலில் வின்சென்ட் கீமரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.

குரோஷியா செஸ்: 2-வது இடத்தில் பிரக்ஞானந்தா
Published on

ஜாக்ரெப்,

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது. இதன் ரேபிட் பிரிவு 9 சுற்றுகளும், பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளும் கொண்டதாகும். இந்த போட்டியில் 10 வீரர்கள் கலந்து கொண்டு மோதுகின்றனர். முதலில் ரேபிட் பிரிவு போட்டி நடைபெறுகிறது. தொடக்க நாளில் 3 சுற்று பந்தயங்கள் நடந்தன. இதன் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 23-வது நகர்த்தலில் வின்சென்ட் கீமரை (ஜெர்மனி) வீழ்த்தினார். அவர் அடுத்த 2 சுற்றுகளில் பிரான்சின் மேக்சிம் வாச்சியர், உலக சாம்பியனும் சக நாட்டவருமான குகேஷ் ஆகியோருடன் டிரா செய்தார்.

3 சுற்றுகள் முடிவில் பிரான்சின் அலிரெஜா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 4 புள்ளிகளுடன் 3 வீரர்களுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com