டேவிஸ் கோப்பை: சுமித் நாகல் தோல்வி, தக்ஷினேஸ்வர் வெற்றி

இந்திய வீரர் சுமித் நாகல், கை டென் ஓடென் (நெதர்லாந்து) மோதினர்.


டேவிஸ் கோப்பை:  சுமித் நாகல் தோல்வி, தக்ஷினேஸ்வர்  வெற்றி
Published on

பெங்களூரு,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா டென்னிஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், கை டென் ஓடென் (நெதர்லாந்து) மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 0-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 162-ம் நிலை வீரரான கை டென் ஓடெனிடம் சுமித் நாகல் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் தக்ஷினேஸ்வர் சுரேஷ் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் 88-ம் நிலை வீரரான ஜெஸ்பர் டி ஜாங்குக்கு (நெதர்லாந்து) வீழ்த்தினார் . முதல் நாள் முடிவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

முதல் நாள் முடிவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com