ஆசிய விளையாட்டுப் போட்டி: கபடியில் மீண்டும் தங்கம் வெல்லுமா இந்தியா? - வீரர்கள் பட்டியல் வெளியீடு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன.
ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Published on

புதுடெல்லி,

ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 21 முதல் கபடி போட்டிகள்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன. இதில் கபடி போட்டிகள் செப்டம்பர் 21 முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 12 வீரர்கள் கொண்ட இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய ஆண்கள் கபடி அணி

அஷு மாலிக், அயன் லோச்சாப், தேவாங் தலால், அர்ஜுன் தேஷ்வால், சுனில் குமார், ஜெய்தீப் தஹியா, ராகுல் சேத்பால், கௌரவ் கத்ரி, சுமித் சங்வான், அங்கீத் ஜக்லான், பவன் ஷெராவத், அஸ்லம் இனாம்தார்.

இந்திய பெண்கள் கபடி அணி

ரிது நேகி, புஷ்பா ராணா, சோனாலி ஷிங்கேட், சஞ்சு தேவி, பூஜா காஜ்லா, ரிது ஷியோரன், ஜோதி தாக்குர், பிங்கி ராய், மனிஷா குமாரி, பவ்னா தாக்குர், ராஜ்ராணி, நிகிதா குமாரி.

தங்கத்தை தக்கவைக்குமா இந்தியா?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிகள், இந்த முறையும் தங்கப் பதக்கத்தை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com