டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை, மலேசியாவின் தீனா முரளிதரன் - பேர்லி டான் இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய இந்திய இணை, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 17-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது.

இதன் மூலம் இந்த ஆட்டத்தை மலேசியாவின் தீனா முரளிதரன் - பேர்லி டான் இணை 19-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட இந்திய இணை தொடரில் இருந்து வெளியேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com