டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்திய இணை வெற்றி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்திய இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்திய இணை வெற்றி
Published on

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு இன்று முன்னேறியுள்ளனர்.

அவர்கள் இங்கிலாந்தின் கேல்லம் ஹெம்மிங் மற்றும் ஸ்டீவன் ஸ்டால்வுட் இணையை 23-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.

இதேபோன்று இன்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த நெஸ்லிஹான் யிஜித் இன்று விளையாடினர். 30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-12, 21-10 என்ற புள்ளி கணக்கில் சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன் இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர்.

இதில் 21-14, 21-11 என்ற கணக்கில் கிதம்பி வெற்றி பெற்றார். போட்டி 30 நிமிடங்களில் முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். பிரணீத்துக்கு எதிராக விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் கிதம்பி வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com