டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து

டென்மார்க் நாட்டின் ஒடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒடென்ஸ்,

டென்மார்க் நாட்டின் ஒடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து - இந்தோனேசியாவின் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தை முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்கும், ஆட்டத்தின் 2வது செட்டை 21-16 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி.சிந்துவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டி அனல் பறந்தது.

இந்த செட்டில் அபாரமாக செயல்பட்ட கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில் இந்த ஆட்டட்தை 21-13, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆட்டத்தில் தோல்வி கண்ட பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com