டைமண்ட் லீக்: 2ம் இடம் பிடித்த நீரஜ் சோப்ரா


டைமண்ட் லீக்: 2ம் இடம் பிடித்த நீரஜ் சோப்ரா
x

ஜெர்மனி வீரர் ஜுலியன் வெப்பர் முதலிடம் பிடித்தார்

சூரிச்,

டைமண்ட் லீக் தொடர் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார். அவர் கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளில் 84.35 மீட்டர், 82 மீட்டர், 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். 3 வாய்ப்புகள் பவுல் முறையில் தவறவிட்டார். இதில், 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார். ஜெர்மனி வீரர் ஜுலியன் வெப்பர் அதிகபட்சமாக 91.51 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

1 More update

Next Story