ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, துர்க்மெனிஸ்தான் மல்யுத்த வீரர் வெளியேற்றப்பட்டார்.
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர்
Published on

ஜகர்தா,

ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் பங்கேற்ற துர்க்மெனிஸ்தான் வீரர் ருஸ்டெம் நஜரோவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. நடப்பு ஆசிய தொடரில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய முதல் வீரரான ருஸ்டெம் நஜாரோவ் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மல்யுத்தத்தில் 57 கிலோ பிரிவில் அவர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அந்த முடிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com