‘கனவு நனவாகி விட்டது’ : வைஷாலி நெகிழ்ச்சி

நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனுடன் மோதும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
‘கனவு நனவாகி விட்டது’ : வைஷாலி நெகிழ்ச்சி
Published on

சென்னை,

சைப்ரஸ் நாட்டில் கடந்த 3 வாரங்களாக நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற வைஷாலி, ஆண்டின் இறுதியில் நடக்கும் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனுடன் மோதும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

முன்னதாக வைஷாலி நிருபர்களிடம் கூறுகையில்,

இது மிகவும் அற்புத மானது. இந்த வெற்றியின் மூலம் எனது கனவு நனவாகி விட்டதாக உணர்கிறேன். எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு அதில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. எனது பெற் றோருக்கும். குடும்பத்தினருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் கள் இல்லாவிட்டால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com