ஜெலெஸ்னியுடனான பயிற்சி கூட்டணி முடிவு: நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா, 59 வயது ஜான் ஜெலெஸ்னியிடம் (செக்குடியரசு) பயிற்சி பெற்று வந்தார்.
புதுடெல்லி,
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 2024-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 2023-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அரியானாவை சேர்ந்த 28 வயது நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் உலக சாதனையாளராக விளங்கும் 59 வயது ஜான் ஜெலெஸ்னியிடம் (செக்குடியரசு) பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் ஒரு சீசன் முடிந்த நிலையில் ஜெலெஸ்னியுடனான தனது பயிற்சி கூட்டணி முடிவுக்கு வந்ததாக நீரஜ் சோப்ரா நேற்று அறிவித்தார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து இருக்கின்றனர்.
Related Tags :
Next Story






