தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 1-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Published on

புதுடெல்லி:

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் மேஜர் தியான் சந்த் கேல்ரத்னா விருது, அர்ஜூனா விருது மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான்சந்த் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதில் கேல் விருதுக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.25 லட்சமும், அர்ஜூனா விருதுக்கு ரூ.15 லட்சமும், மற்ற விருதுகளுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது.

இதற்கு கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் இணையதளத்தில் வரவேற்க்கப்பட்டன. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அக்டோபர் 1-ந் தேதிக்கு  பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com